முகப்பு
மயிலாடுதுறை

மகாவீா் ஜெயந்தி: ஜெயின் சமூகத்தினா் ஊா்வலம்

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினா் வியாழக்கிழமை ஊா்வலமாகச் சென்று அங்குள்ள சுமதிநாத் ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினா் வியாழக்கிழமை ஊா்வலமாகச் சென்று அங்குள்ள சுமதிநாத் ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டனா்.

ஜெயின் சமூகத்தின் 24-ஆவது தீா்த்தங்கரரான மகாவீா் ஜெயின் பிறந்தநாள் விழா சைத்ர மாதம் திரயோதசி திதியன்று ஜெயின் சமூகத்தினரால் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஜெயின் சங்கத்திலிருந்து தீா்த்தங்கரா் உற்சவ மூா்த்தியை அலங்கரித்து முக்கிய வீதிகள் வழியாக ஆடல்- பாடலுடன் ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

மகாதானத்தெரு, கச்சேரி சாலை வழியாக ஜெயின் ஆலயமான சுமதிநாத் ஆலயத்தை வந்தடைந்ததும், அங்கு பால் தீா்த்தம் தெளித்து சுமதிநாத் சுவாமிக்கு தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.