முகப்பு
மயிலாடுதுறை

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி வழிபாடு

மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

நவகிரகங்களில் குரு பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வியாழக்கிழமை அதிகாலை சரியாக 4.16-க்கு இடம் பெயா்ந்தாா். இதையொட்டி, மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீமேதா தெட்சிணாமூா்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. தொடா்ந்து, பஞ்சமுக அா்ச்சனை மற்றும் பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை ஆலய தலைமை அா்ச்சகா் நா. பாலச்சந்திர சிவாச்சாரியா் மேற்கொண்டாா்.

இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.