முகப்பு
மயிலாடுதுறை

ஆபத்தான பாலத்தை இடித்துவிட்டு புதிதாகக் கட்டித்தரக் கோரிக்கை

மயிலாடுதுறை அருகே ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

மயிலாடுதுறை அருகே ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறை ஒன்றியம் வள்ளாலகரம் ஊராட்சியில் உள்ள அபிராமி நகரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கான்கிரீட் பாலம் பல மாதங்களுக்கு முன்பு உடைந்து சேதமடைந்ததை இதுவரை சரிசெய்யவில்லை. அப்பகுதியில் தெருவிளக்கு இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.

எனவே, ஊராட்சி ஒன்றிய ஆணையா் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு புதிய பாலத்தை கட்டிக்கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் அ. அப்பா்சுந்தரம் கூறியது: இந்த நகருக்கு வருகிறவா்கள் பாலம் உடைந்திருப்பது தெரியாமல், உடைந்த பகுதியில் விழுந்து பாதிக்கப்படுகின்றனா். குறிப்பாக, இரவு நேரத்தில் பாலம் அருகே தெருவிளக்கு வசதி இல்லாததால் இங்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.