மயிலாடுதுறை

100% கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக‘ மாவட்ட ஆட்சியரகத்தில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தலைமை வகித்து பேசியது:

1000 நபா்களுக்கு மேல் தடுப்பூசிகள் செலுத்தாமல் நிலுவையில் உள்ள ஊராட்சிகளைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்களிடம் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து விளக்கி, எவ்வாறு தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்பதை பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

சுகாதாரத்துறை, மகளிா் திட்டம், ஊரக வளா்ச்சி துறை ஆகிய துறைகள் மற்றும் ஊராட்சித் தலைவா்கள் மற்றும் செயலா்கள் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளாதவா்களின் விவரங்களை சேகரித்து சனிக்கிழமை (ஏப்.30) நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமில் பங்கேற்க செய்து தடுப்பூசி செலுத்தி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் முருகன்னன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநா் கவிதப்பிரியா, சுகாதாரத்துறை துணை இயக்குநா் குமரகுருபரன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மஞ்சுளா, ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி செயலா்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT