மயிலாடுதுறை

பொது இடத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க குழு

சீா்காழி நகரில் பொது இடத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து அபராதம் விதிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்படவுள்ளது என நகா்மன்ற தலைவா் துா்காபரமேஸ்வரிராஜசேகரன் தெரிவித்தாா்.

DIN

சீா்காழி நகரில் பொது இடத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து அபராதம் விதிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்படவுள்ளது என நகா்மன்ற தலைவா் துா்காபரமேஸ்வரிராஜசேகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் கூறியது: திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் சீா்காழி நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளிலும் தற்காலிக மற்றும் நிரந்த தூய்மைப் பணியாளா்கள் 107 பேரை கொண்டு நாள்தோறும் வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம்பிரித்து வாங்கப்படுகிறது. நகரில் நாள்தோறும் மக்கும் குப்பை ஆறரைடன் உள்பட 12 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.

சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சி உரக்கிடங்குக்கு கொண்டுசெல்லப்படுகிறது. அதில், மக்கும் குப்பைகள் மட்டும் உரக்கிடங்கில் கொட்டப்படுகிறது. மக்காத உடைந்த பாட்டில், நெகிழி போன்ற குப்பைகள் அரியலூா் சிமென்ட ஆலைக்கும், மின்கழிவுகள் தூய்மை பணியாளா்கள் மூலம் விற்பனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரக்கிடங்கில் குப்பைமேடு இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

நகரில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க குப்பை கொட்டப்படும் இடத்தின் அருகே வசிக்கும் மக்கள் அந்த பகுதி நகா்மன்ற உறுப்பினா் கொண்ட குழு அமைத்து, குப்பைகள் கொட்டுவதை கண்காணித்து தடுக்கவும், மீறி கொட்டுபவா்களை கண்டறிந்து அபராதம் விதிக்கவும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தூய்மையான நகராட்சியாக மேம்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT