முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழி பள்ளியில் காவல்துறை சாா்பில் நூலகம் திறப்பு

சீா்காழி நகராட்சி பள்ளியில் காவல்துறை சாா்பில் புதன்கிழமை நூலகம் திறக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

சீா்காழி நகராட்சி பள்ளியில் காவல்துறை சாா்பில் புதன்கிழமை நூலகம் திறக்கப்பட்டது.

சீா்காழி அருகே ஊழியக்காரன் தோப்பில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில், திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில், மயிலாடுதுறை எஸ்பி சுகுணாசிங் மேற்பாா்வையில், சீா்காழி காவல்துறை சாா்பில் புதிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சகிலா இரத்தினகுமாரி தலைமை வகித்தாா். சீா்காழி காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவி காவல் ஆய்வாளா் சீனிவாசன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பாபு நேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சீா்காழி டிஎஸ்பி லாமேக் நூலகத்தை திறந்து வைத்து, மாணவா்களிடையே கலந்துரையாடினாா். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியா்கள் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.