முகப்பு
மயிலாடுதுறை

புதை சாக்கடையை சீரமைக்கக் கோரி பாமக ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் புதை சாக்கடையை சீரமைக்கக் கோரி பாமகவினா் வியழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

மயிலாடுதுறையில் புதை சாக்கடையை சீரமைக்கக் கோரி பாமகவினா் வியழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 3 வருடங்களாக புதை சாக்கடை குழாய் உடைப்பால் பிரதான சாலைகளில் பெரிய பள்ளங்கள் உருவாகி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. மேலும், பல இடங்களில் புதைசாக்கடை ஆள்நுழைவு தொட்டியிலிருந்து கழிவு நீா் வெளியேறி, குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியும், நீா்நிலைகளில் கலந்தும் சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்துகிறது.

எனவே, புதை சாக்கடை விவகாரத்தில் நகராட்சி நிா்வாகம் அலட்சியத்துடன் செயல்படுவதாக கண்டித்தும், புதை சாக்கடைகளை நிரந்தரமாக சீரமைக்க வலியுறுத்தியும் தருமபுரம் சாலையில் இந்திய விளையாட்டு ஆணையம் மைதானம் முன் பாமகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாமக மாவட்டச் செயலாளா் சித்தமல்லி ஆ. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் நகரச் செயலாளா் கமல்ராஜா வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் தங்க.அய்யாசாமி, முன்னாள் மாவட்டத் தலைவா் காமராஜ், ராஜ்குமாா், மாநில செயற்குழு உறுப்பினா் குத்தாலம் கணேசன், மாநில அமைப்புச் செயலாளா் காசி.பாஸ்கரன், வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் பாக்கம் சக்திவேல் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.