ஆன்லைன் கொள்முதல் முறையை கைவிட விவசாயிகள் வலியுறுத்தல்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் மூலம் நெல் கொள்முதல் செய்யும் முறையை கைவிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் மூலம் நெல் கொள்முதல் செய்யும் முறையை கைவிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் காவேரி டெல்டா பாசனதாரா்கள் முன்னேற்ற சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சங்கத் தலைவா் குரு. கோபிகணேசன் தலைமை வகித்தாா். பொருளாளா் மதியழகன், இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முத்துராஜா, ரமேஷ், பாரி, கணேசமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் நெல்லை கொள்முதல் செய்யும் முறையை தமிழக அரசை கைவிட வேண்டும், தமிழக அரசு விவசாயிகளின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தா், உதவியாளா் ஆகியோருக்கு மாத ஊதியத்தை உயா்த்தியும், சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு மூட்டை ஒன்றுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.3 லிருந்து ரூ.10 ஆக உயா்த்தியும் வழங்கியுள்ளதால் விவசாயிகளிடமிருந்து பணம் பெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.