சீர்காழி அருகே 2 வயதில் உலக சாதனை படைத்த குழந்தை!
சீர்காழி அருகே 2 வயது குழந்தை ஒன்று, தமிழ் உயிர் எழுத்துக்கள், தமிழ், ஆங்கில மாதங்களின் பெயர்கள், நம்பர்கள் உள்ளிட்டவற்றைக் கூறி உலக சாதனை படைத்துள்ளது.
சீர்காழி அருகே 2 வயது குழந்தை ஒன்று, தமிழ் உயிர் எழுத்துக்கள், தமிழ், ஆங்கில மாதங்களின் பெயர்கள், நம்பர்கள் உள்ளிட்டவற்றைக் கூறி உலக சாதனை படைத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் அசாமில் இந்திய விமானப் படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி யாமினி. இவர்களுக்கு அகரமுதல்வன் என்ற 2 வயது குழந்தை உள்ளது. குழந்தை 8 மாதத்திலேயே பெற்றோர்கள் கூறும் பொருளை நன்கு நியாபகம் வைத்துக்கொண்டு மீண்டும் கேட்கும்போது மறக்காமல் மழலையுடன் கூறுவாராம். குழந்தையின் இந்த திறனை அறிந்த ஜெகதீஸ்வரன் யாமினி ஆகியோர் குழந்தையின் தனித்திறமை மேலும் மெருகேற்ற தினமும் பயிற்சியளித்தனர்.
இதையும் படிக்க- டிம் பெயின் இந்தியா வராமலிருந்தால் நல்லது: அஸ்வின்
Advertisement
பயிற்சியின் காரணமாக குழந்தையும், திருக்குறள், தமிழ் உயிர் எழுத்துக்கள், தமிழ், ஆங்கில மாதங்களின் பெயர்கள், நம்பர்கள், இந்தியில் 1 முதல் 10 வரையிலான நம்பர்கள் ஆகியவற்றை கூறி அசத்தி வருகிறார். குழந்தையின் திறமையை பார்த்த பெற்றோர் மேலும் ஊக்கமளித்து, சிறு பயிற்சியும் அவ்வபோது வழங்கியுள்ளனர். விளையாடும்போதும், குழந்தையுடன் சேர்ந்து பெற்றோர்களும் நேரம் ஒதுக்கி விளையாடுவர்களாம். இவ்வாறு குழந்தையின் இந்த திறமையை கலாம் உலக சாதனை குழுமத்திற்கு எடுத்து சென்றுள்ளனர் குழந்தையின் பெற்றோர். குழந்தையின் தனித்திறமையை குழுமத்தின் அறிவுறுத்தல் படி வீடியோோவாக எடுத்து அனுப்பியுள்ளனர்.
அவ்வாறு அகரமுதல்வன் திருக்குறள் 3, தமிழ் உயிர் எழுத்துகள், வாரங்கள் & மாதங்கள், எண்கள் (தமிழ், ஆங்கிலம், ஹிந்தி), தமிழில் எண்கள் 1 முதல் 100 வரை தேசிய தலைவர்கள், பல்வேறு நாடுகளின் தேசிய கொடிகள், சமையல் பொருட்கள், உபகரணங்கள், படிப்பு உபரணங்கள், ஃபிளாஷ் கார்டு ஸ், ரைம்ஸ், பறவைகள், வாகனங்கள், விலங்குகள், பழங்கள், காய்கறிகள், உடல் உறுப்புகள் என்று கிட்டதட்ட 1000 எண்ணிக்கை வரை கூறி, கலாம் உலக சாதனையில் பதிவு செய்யப்பட்டு இரண்டு வயதுக்குள் இடம் பெற்று விட்டார். இவரின் திறமையை அங்கிகரித்து எளிதில் கிரகித்து புரிந்து உணர்ந்து கொள்ளும் திறமையுள்ள அசாதாரணமான மேதகு குழந்தை என்ற பட்டத்தையும், பதக்கங்களையும் வழங்கி உலக சாதனையாக பதிவு செய்து அங்கீகரித்து கௌரவித்துள்ளது.
இதற்கு முன்பு 500 குறைவான எண்ணிக்கையிலான வார்த்தைகளை மட்டுமே சாதனையாக கலாம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. சாதனையை அங்கீகரித்து வெளிக்கொண்டுவர குழந்தையின் பெற்றோர்கள் சிறுவயது முதலே அன்றாடப் பணியில் குழந்தைக்காக நேரம் செலவழித்து வந்ததுடன், குழந்தைக்கு சிறு வயது முதலே செல்போன் தராமலும் வளர்த்துள்ளனர். திறமையை வளர்க்கும் பொருட்கள் மட்டும் கண்ணில் படும்படி குழந்தையின் திறமையை மேம்படுத்திக் வளர்த்து வந்துள்ளனர் பெற்றோர். ஒரு சிறிய வயதிலேயே உலக சாதனை படைத்து பெற்றோருக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளது.