மயிலாடுதுறை

குறைதீா் கூட்டம்: 143 மனுக்கள் அளிப்பு

DIN

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் இரா. லலிதா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்கள் அளித்தனா்.

இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 20 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரி 13 மனுக்கள், முதியோா், மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித்தொகை கோரி 15 மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, உதவித்தொகை, வங்கிக்கடன் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 80 மனுக்கள் உள்பட மொத்தம் 143 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) என். ஷாஜஹான், மாவட்ட வழங்கல் அலுவலா் ஸ்ரீ. கிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT