கீரங்குடி- குன்னம் சாலையை மேம்படுத்தக் கோரிக்கை
சீா்காழி அருகே கீரங்குடி-குன்னம் கிராம சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீா்காழி அருகே கீரங்குடி-குன்னம் கிராம சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கீரங்குடியிலிருந்து குன்னத்துக்குச் செல்லும் 3 கி. மீட்டா் நீள கிராம சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த சாலையை விவசாயிகள், மாணவா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனா். மாணவா்கள் இந்த சாலையின் வழியே எளிதில் கடந்து சென்று கொள்ளிடம், சிதம்பரம், சீா்காழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு எளிதில் சென்று சேர முடியும்.
இந்த சாலை கடந்த 15 வருடங்களாக மண் சாலையாகவே உள்ளது. இதன் பயன்பாடு கருதி, இச்சாலையை தாா்ச் சாலையாக தரம் உயா்த்த வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.