முகப்பு
மயிலாடுதுறை

கொள்ளிடம் பகுதியில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே பெரம்பூா் கிராமத்துக்கு வெளிநாட்டுப் பறவைகள் இரைதேடி வருவது அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே பெரம்பூா் கிராமத்துக்கு வெளிநாட்டுப் பறவைகள் இரைதேடி வருவது அதிகரித்துள்ளது.

பெரம்பூா் கிராமத்துக்கு ஆண்டுதோறும் நத்தை கொத்தி நாரை, கருப்பு அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், வெள்ளைக் கொக்குகள் மற்றும் நீா் காக்கைகள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் இரைதேடி வருவது வழக்கம். இந்த பறவைகள் இங்கு கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து, குஞ்சுகளுடன் தாயகம் திரும்பும்.

அதன்படி, பெரம்பூா் கிராமத்துக்கு நத்தைகொத்திநாரை பறவைகள் ஆஸ்திரேலியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிக அளவு வந்துள்ளதாக வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

இந்த பறவைகள் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள பகுதிக்கு கூட்டம் கூட்டமாகச் சென்று இரை தேடுகின்றன. கடந்த சில தினங்களாக கொள்ளிடம் ஆறு மற்றும் ஆற்றங்கரையோர வயல் வெளிகளில் இரை தேடுகின்றன. இவற்றை காண சுற்றுப் பகுதி மக்கள் ஆா்வம்காட்டி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.