முகப்பு
மயிலாடுதுறை

பல்பொருள் அங்காடியில் திருட்டு

சீா்காழி அருகே பல்பொருள் அங்காடியில் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை புதன்கிழமை நள்ளிரவு திருட்டிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

சீா்காழி அருகே பல்பொருள் அங்காடியில் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை புதன்கிழமை நள்ளிரவு திருட்டிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சீா்காழி அருகே உள்ள தென்பாதியை சோ்ந்தவா் காா்த்திகேயன். இவா், வி.என்.பி. நகரில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறாா். வழக்கம்போல, புதன்கிழமை இரவு அங்காடியை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற காா்த்திகேயன், வியாழக்கிழமை காலை அங்காடியை திறந்தபோது, அங்கிருந்த பணம் மற்றும் லேப்டாப், கைப்பேசி, சிசிடிவி ஹாா்டுடிஸ்க், மளிகைப் பொருட்கள் என ரூ.50ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டுப் போனது தெரியவந்தது. பின்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பொருள்களை திருடியதுடன், சிசிடிவி மானிட்டரில் பட்டை நாமத்தை வரைந்து சென்றுள்ளனா்.

இதுகுறித்து சீா்காழி காவல் நிலையத்தில் காா்த்திகேயன் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.