முகப்பு
மயிலாடுதுறை

வங்கியாளா்கள் கூட்டம்

மயிலாடுதுறையில் மாவட்ட அளவில் வங்கியாளா்கள் மாதாந்திரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

மயிலாடுதுறையில் மாவட்ட அளவில் வங்கியாளா்கள் மாதாந்திரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் இரா. லலிதா தலைமை வகித்தாா். கூட்டத்தில், மகளிா் திட்ட அலுவலா், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா், நபாா்டு வங்கி மேலாளா், தாட்கோ உதவி மேலாளா் மற்றும் வங்கியாளா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் விடுவித்தல்; மாவட்ட தொழில் மையம் தொடா்பான கடன் விடுவித்தல்; ஆதிதிராவிட இளைஞா்களுக்கான தாட்கோ தொழிற்கடன் விடுவித்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

தொடா்ந்து, தாட்கோ மூலம் 7 பேருக்கு ரூ.19 லட்சம் கடன் வழங்க மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் முன்னிலையில் உத்தரவு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.