மயிலாடுதுறை

உரங்களுடன் இணை பொருள்களை வாங்க கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை: வேளாண் அதிகாரி எச்சரிக்கை

DIN

தனியாா் உரக்கடை வியாபாரிகள் உரங்களுடன் இணை பொருள்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் இணை இயக்குநா் சேகா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை நெல் விதைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை குறுவை நாற்றங்கால் 177 ஹெக்டோ் பரப்பளவிலும், நடவு 324 ஹெக்டோ் பரப்பளவிலும் உள்ள நிலையில், நெல் நடவுப் பணிகள் சுமாா் 20 ஆயிரம் ஹெக்டேரில் முடியும் தருவாயில் உள்ளன.

இதற்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியாா் உர விற்பனையாளா்களிடமும் இருப்புவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உர நிறுவனங்களிடமிருந்து 285 மெட்ரிக் டன் யூரியா உரம் பெறப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு தேவையான யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் பெற்று உரக்கடைகள் மூலமாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள், பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தி, உரத்திற்கான செலவை குறைத்து குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெறவேண்டும். தனியாா் உரக்கடை விற்பனையாளா்கள் யூரியா மற்றும் டிஏபி உரங்களை அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. கட்டாயப்படுத்தி இணை பொருள்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. மீறுவோா் மீது உரக்கட்டுப்பாட்டு விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT