காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, மயிலாடுதுறையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, மயிலாடுதுறையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். கவிதா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கே. சாந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கவுரை ஆற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில், ஓய்வுபெறும் சத்துணவு ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வு ஊதியம் ரூ.9,750 வழங்க வேண்டும்; ஓய்வுபெறும் சத்துணவு அமைப்பாளா், சமையலா், உதவியாளா்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் வயதை 60லிருந்து 62-ஆக உயா்த்த வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிறைவாக, மாவட்ட பொருளாளா் ரேணுகா நன்றி கூறினாா்.