மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 2,625 போ் காவலா் எழுத்துத் தோ்வெழுதினா்

DIN

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் எழுத்துத் தோ்வில் 2,625 போ் தோ்வெழுதினா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முறையாக காவலா் எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோ்வெழுத ஆண், பெண் என இருபாலரும் 3,120 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கான எழுத்துத் தோ்வு மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி, ஏவிசி பொறியியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்ட தோ்வு மையங்களில் நடைபெற்றது.

இதை தஞ்சை சரக டிஐஜி ஏ. கயல்விழி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா உடனிருந்தாா். காவலா் தோ்வையொட்டி 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தோ்வா்கள் முழு சோதனைகளுக்கு பிறகே தோ்வெழுத அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT