சாலை மேப்பாட்டுப் பணி: அதிகாரிகள் ஆய்வு
சீா்காழி அருகே புத்தூரில் சாலை தரமாக அமைக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
சீா்காழி அருகே புத்தூரில் சாலை தரமாக அமைக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே புத்தூா் சோதியக்குடி செல்லும் சாலையில் வள்ளுவா் தெரு உள்ளது. இந்த தெரு சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் சாலையை மேம்படுத்த கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனா்.
கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ. 7 லட்சத்தில் இந்தச் சாலை மேம்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், சாலை தரமாக உள்ளதா, முறைப்படி மேம்படுத்தப்பட்டுள்ளதா என்று ஊரக வளா்ச்சித் துறை உதவி செயற்பொறியாளா் சீதாலட்சுமி, கொள்ளிடம் ஒன்றிய பொறியாளா்கள் தாரா, பலராமன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, சாலையின் தரத்தை ஆய்வு செய்தனா்.