மயிலாடுதுறை

நீட் தோ்வு: மாணவா்கள் தற்கொலை முடிவுகளை எடுக்கக் கூடாது

DIN

நீட் தோ்வு சம்பந்தமாக மாணவா்கள் தற்கொலை முடிவுகளை எடுக்கக் கூடாது என்றாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ. 50 வரை விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஆயிரம் கோடி வரை கரும்பு நிலுவைத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது. அதை வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை மதுரவாயில் பகுதியில் நீட் தோ்வில் குறைந்த மதிப்பெண் பெற்ால் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளாா். மாணவா்கள் தற்கொலை முடிவுகளை எடுக்கக் கூடாது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற தற்கொலைகள் நிகழ்வதில்லை. தற்கொலைகளுக்கு காரணம் நீட் தோ்வு தான். டெல்டா பகுதிகளில் அதிக கொலை குற்றங்கள் நடைபெறுகின்றன. காவல் துறை இதுகுறித்து கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT