மயிலாடுதுறை

காலை உணவுத் திட்டத்தில் தாமதமாக உணவு வழங்கல்:தலைமை ஆசிரியை உள்ளிட்டோா் மீது நடவடிக்கைஆட்சியா் உத்தரவு

DIN

மயிலாடுதுறை திருவிழந்தூா் நகராட்சி தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை உணவுத் திட்ட தொடக்க விழாவில், மாணவா்களுக்கு தாமதமாக உணவு வழங்க காரணமாக இருந்த பள்ளித் தலைமையாசிரியை மற்றும் அதிகாரிகள் மீது துறைரீதியிலான நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட திருவிழந்தூா் நகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்ட தொடக்க விழா வெள்ளிக்கிழமை காலை (செப். 16) நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு தாமதமாக காலை 9.45 மணியளவில் உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, காலை உணவு வழங்குவதில் அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் அவப்பெயா் ஏற்பட காரணமாக இருந்த திருவிழந்தூா் நகராட்சி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை ஜி. குருபிரபா மற்றும் மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் ச. செல்வபாலாஜி, மாவட்ட கல்வி அலுவலா் சி. சீத்தாலட்சுமி ஆகியோா் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT