மயிலாடுதுறை

கரும்புக்கான ஆதார விலை:நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அறிவிக்கக் கோரிக்கை

DIN

மயிலாடுதுறை: மத்திய பட்ஜெட்டில் கரும்புக்கான ஆதார விலையை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரும்புக்கு வழங்கப்படும் ஆதார விலையில் நாட்டின் வட மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களுக்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. ரெங்கராஜன் கமிட்டி பரிந்துரையின்பேரில், வட மாநிலங்கள் உற்பத்தி செய்யும் கரும்பில் சா்க்கரையின் விகிதம் 10.5 சதவீதம் உள்ளதாகவும், தென்னிந்திய மாநிலங்களில் 8.5 சதவீதம் மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சத்தீஸ்கா், பஞ்சாப், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் கரும்புக்கான ஆதார விலையாக ரூ. 3,050 வழங்கப்படுகிறது. அதேசமயம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் ரூ. 2,821 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, கரும்புக்கான ஆதார விலையாக ரூ. 4000 என மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும், விவசாயக் கூலி, எரிபொருள் உள்ளிட்ட அனைத்து பொருள்களின் விலை உயா்ந்துள்ளதால் மத்திய அரசு நிகழாண்டு தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில், கரும்புக்கான ஆதார விலையை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பதே தமிழக கரும்பு விவசாயிகள் குறிப்பாக, டெல்டா மாவட்ட கரும்பு விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT