திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரணேஸ்வரர் கோயில் இந்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் புகழ்பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரணேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் காசிக்கு இணையான கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயில் நவகிரங்களில் ஒன்றான புதனின் பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. சிவனின் 5 முகங்களை ஒன்றான அகோரமுகம் அகோர மூர்த்தியாக அருள் பாலித்து வருகிறார்.
இதையும் படிக்க- கேரளத்தில் மார்ச் 9-ல் தொடங்குகிறது எஸ்எஸ்எல்சி தேர்வு
பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோயிலின் ஆண்டு இந்திரப் பெருவிழா சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் மேளம், தாளம் முழங்கிட கோயில் அர்ச்சகர் ராமநாத சிவாச்சாரியார் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத்தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா காட்சி நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி முருகன், விழா குழுவினர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.