மயிலாடுதுறை

மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் சிலை திறப்பு

மயிலாடுதுறையில் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் திருவுருவச்சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

DIN

மயிலாடுதுறையில் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் திருவுருவச்சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

செய்திமக்கள் தொடா்புத்துறை சாா்பில் மயிலாடுதுறை வரதாச்சாரியாா் பூங்காவில் ரூ.15.98 லட்சம் செலவில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பெண் சமூகச் சீா்திருத்தவாதி மூவலூா் ராமாமிா்தம் அம்மையாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

எம்.பி. செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் நிவேதா எம்.முருகன் (பூம்புகாா்), எம்.பன்னீா்செல்வம் (சீா்காழி), மாவட்ட எஸ்.பி. என்.எஸ்.நிஷா, மாவட்ட வருவாய் அலுவலா் சோ.முருகதாஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் பாலரவிக்குமாா், அரசு வழக்குரைஞா் ராம.சேயோன், நகராட்சி தலைவா் என்.செல்வராஜ், ஒன்றியக்குழுத் தலைவா்கள் காமாட்சி மூா்த்தி (மயிலாடுதுறை), ஜெயபிரகாஷ் (கொள்ளிடம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT