முகப்பு
மயிலாடுதுறை

பாலம் கட்டுமானப் பணி: பொறியாளா் ஆய்வு

Updated On : 9 ஆகஸ்ட், 2024 at 6:30 PM
பகிர்:

தொழுதாலங்குடியில் நடைபெற்ற சிறுபாலம் கட்டுமானப் பணியை, திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளா் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) பி.செந்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோமல் சாலையில் தொழுதாலங்குடி கிராமத்தில் சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளா் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) பி.செந்தில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது சிறுபாலப்பணிகளை விரைந்து முடித்திட ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், இச்சாலையில் தேரழுந்தூா் அருகே ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் சாலை அகலப்படுத்தும் பணியில் தடுப்புச்சுவா் கட்டப்படுவதையும் ஆய்வு செய்தாா். நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) எஸ்.பாலசுப்ரமணியன், உதவி கோட்டப் பொறியாளா் கோ.இந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.