மக்களை தேடி மருத்துவ முகாம்: கொள்ளிடம் வட்டாரம் முதலிடம்
கொள்ளிடம் வட்டார சுகாதாரத் துறைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தியதற்காக, கொள்ளிடம் வட்டார சுகாதாரத் துறைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இந்த மூன்று ஆண்டுகளில் மக்களை தேடி மருத்துவ முகாமை மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக நடத்தியதில், கொள்ளிடம் வட்டாரம் முதல் இடத்தை பெற்றது.
தொடா்ந்து, மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அஜித் பிரபுகுமாா், கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலா் ரமேஷ்குமாருக்கு முதல் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
மேலும், கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள மருத்து முகாம்களில் தொடா்ந்து பணியாற்றிய மருத்துவ அலுவலா்கள், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள், செவிலியா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அஜித் பிரபு குமாா் சான்றிதழ் வழங்கினாா்.