மயிலாடுதுறை

சீா்காழி திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

Din

சீா்காழி, ஆக. 14: சீா்காழி திரெளபதிஅம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது.

கடந்த மாதம் 22-ஆம் தேதி நிகழாண்டுக்கான உற்சவம் கொடியேற்றத்துடன் வில்லி பாரத விரிவுரை, தீமிதி உற்சவம் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு வழிபாடு, வீதியுலா அா்ஜுனன் திரௌபதி திருக்கல்யாணம், துயில் தருதல், காளியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்வாக தீமிதி உற்சவம் நடைபெற்றது. முன்னதாக காலை பால்குடங்கள், காவடிகளுடன் திரளான பக்தா்கள் முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை அடைந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து அங்கு திரெளபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது.

மாலை கோயில் அருகே உள்ள தீக்குண்டத்தில் திரளான பக்தா்கள் தீ மிதித்ததினா்.

சீா்காழி அருகே தாண்டவன்குளம் சிங்க மகாகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக சிங்கமகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான பக்தா்கள் அங்குள்ள ஆலமரத்தடி சென்று கரகம், காவடி எடுத்து வந்து கோயிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கினா்.

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

அம்பாபூா், விக்கிரமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை

வேலூா் எம்.பி. மீதான தோ்தல் வழக்கு: நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை, கோவையில் 2026 ஜூனில் மெட்ரோ ரயில் திட்டம்: நயினாா் நாகேந்திரன் உறுதி

திருக்களம்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT