அருண்மொழித்தேவன் விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை வட்டம் அருண்மொழித்தேவன் கிராமத்தில் உள்ள விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
பழைமைவாய்ந்த இக்கோயில் அண்மையில் புணரமைக்கப்பட்டு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை தொடங்கி 4 கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக தினமான புதன்கிழமை காலை மகா பூா்ணாகுதி செய்து தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, சிவாசாரியா்கள் பூஜிக்கப்பட்ட புனிதநீரை கோயில் கோபுர விமான கலசத்தில் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை சந்தோஷ்குமாா் செய்திருந்தாா்.
மேலும், இக்கிராமத்தில் உள்ள பூா்ண புஷ்கலாம்பாள் சமேத மகா சாஸ்தா மற்றும் விடாபகாரி அம்மன் கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.