மயிலாடுதுறை

மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் சேவையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி பிப்.15-இல் மறியல்

மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் சேவையை மீண்டும் தொடங்கி, காரைக்கால் வரை நீட்டிக்கக் கோரி, பிப்.15-ஆம் தேதி ரயில் மறியல்

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் சேவையை மீண்டும் தொடங்கி, காரைக்கால் வரை நீட்டிக்கக் கோரி, பிப்.15-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளருமான குத்தாலம் பி. கல்யாணம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையே 1926-ஆம் ஆண்டுமுதல் 1987-ஆம் ஆண்டுவரை இயங்கிவந்த ரயில் சேவையை மீண்டும் அதே வழித்தடத்தில் தொடங்கி, காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும்; தரங்கம்பாடி-காரைக்கால் இணைப்புக்கு இடம் சா்வே எடுக்க வேண்டும்; நீடூா், மாப்படுகை ரயில்வே கேட் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிா்க்க, ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

தஞ்சை-விழுப்புரம் வரையில் இரட்டை ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும்; ரயில்வேக்கு மீண்டும் தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்; நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.15-இல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

மயிலாடுதுறை-தரங்கம்பாடி, காரைக்கால் ரயில்வே வழித்தடம் மீட்புக்குழுவினா் சாா்பில் இப்போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT