அக்னிபத் திட்டத்தில் இந்திய விமானப் படையில் சேர தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய விமானப்படை அக்னிவீா்வாயு ராணுவ ஆள் சோ்ப்பிற்கான இணையவழி விண்ணப்ப பதிவு திங்கள்கிழமை (ஜூலை 8) முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இணையவழி தோ்வு அக்.18-ஆம் தேதி நடைபெறவுள்ளது என இந்திய விமானப்படை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2004-ஜூலை 3-ஆம் தேதிமுதல் 2008-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதிக்குள் பிறந்த திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களுக்கு இணையதளத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.