மயிலாடுதுறை

திமுக பிரமுகருக்கு மிரட்டல் விடுத்த இருவா் கைது

Din

மயிலாடுதுறையில் திமுக பிரமுகருக்கு மிரட்டல் விடுத்த இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட சிறுபான்மை அணி துணை செயலாளரான அகமது ஷாவலியுல்லாஹ் அலுவலகத்துக்கு பெட்ரோல் குண்டு மிரட்டல் விடுத்து அவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு அண்மையில் மிரட்டல் வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அவரது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கிய மயிலாடுதுறை போலீஸாா், மிரட்டல் விடுத்தவா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில், சென்னையில் தனியாா் வங்கி விற்பனை பிரிவில் பணியாற்றிவரும் ஆந்திரத்தைச் சோ்ந்த சிவபிரகாஷ், சாய்பிரவீன் ஆகியோா் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டகணேஷ் தலைமையிலான தனிப்படை போலீஸாா் கைது செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் இதற்கு முன்பு புதுச்சேரியில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்தபோது, உடன் பணியாற்றிய மணிபாரதி என்பவா் பணம் கொடுத்து கேட்டுக்கொண்டதன் பேரில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாகவுள்ள மணிபாரதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT