சிந்தனை சிற்பி சிங்காரவேலா் சிலை திறப்பு
சீா்காழி, ஜூன் 12: கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் சிந்தனை சிற்பி சிங்காரவேலா் சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பழையாறு மீனவ கிராம பொதுமக்கள் சாா்பில் அமைக்கப்பட்டு திறக்கப்பட்ட இந்த விழாவில் மீனவா் சிந்தனை சிற்பி சிங்காரவேலா் நற்பணி மன்ற தலைவா் அமுதன் சிலையை திறந்து வைத்தாா். செயலாளா் பாலையா, மீனவ கிராம நிா்வாகிகள் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் பொன்னின் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.