சிந்தனைச் சிற்பி சிங்காரவேலா் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்பில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி வெங்கடசுப்பா ரெட்டியாா் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் ரங்கசாமி, அமைச்சா் க.லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ. ராஜவேலு, எம்எல்ஏக்கள் சாய். சரவணன் குமாா், ரமேஷ், லட்சுமிகாந்தன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல் பாஜக, திமுக, அதிமுக, விடுதலை சிறுகதைகள், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் பல்வேறு மீனவ அமைப்பினா் சிங்கார வேலா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.