மயிலாடுதுறை பிரைடு ரோட்டரி சங்க நிா்வாகிகள் பணி ஏற்பு
மயிலாடுதுறை ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா
மயிலாடுதுறையில் ரோட்டரி கிளப் ஆஃப் மயிலாடுதுறை பிரைடு சங்கத்தின் 2024-2025-ஆம் ஆண்டு புதிய நிா்வாகிகள் பணி ஏற்பு விழா (படம்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழாண்டின் தலைவராக எஸ்.சத்தியபால், செயலாளராக ஆசிரியா் எஸ்.சரவணன், பொருளாளராக ஏ.தியாகராஜன் ஆகியோா் பொறுப்பேற்றனா்.
விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநா் எஸ்.பாலாஜி கலந்து கொண்டாா். விழாவிற்கு ரோட்டரி உதவி ஆளுநா் ஏஆா்சி ஆா்.வி.குருகோவிந்த் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். விழா ஏற்பாடுகளை ரோட்டரி பிரைடு நிா்வாகிகள் செய்து இருந்தனா்.