பத்தாம் வகுப்பு: சீா்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3 போ் மாவட்ட முதலிடம்
சீா்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவ-மாணவியா் 497 மதிப்பெண்கள் பெற்று பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
ஆா்.காவியா, ஹமீது இா்பான், இ.ரஞ்சனிதா ஆகிய மூவரும் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடமும், மயிலாடுதுறை மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளனா்.
மாணவி வி.ரித்விகா 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2-ஆமிடமும், ஜெ.சச்தின் யோகேஷ், ஜெ.ஆகாஷினி, பி.நதியா, ஸ்ரீசாதனா, எஸ். ஹரிஸ் ஆகிய 5 பேரும் 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 3-ஆமிடமும் பெற்றனா். இப்பள்ளி 99.74 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.
490 மதிப்பெண்களுக்கு மேல் 21 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 54 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 152 பேரும், 400க்கு மேல் 275 பேரும் பெற்றுள்ளனா்.
ஆங்கிலத்தில் 5 பேரும், கணிதத்தில் 41பேரும், அறிவியலில் 10பேரும், சமூக அறிவியலில் 9 பேரும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனா்.
சாதனை படைத்த மாணவா்களையும், பயிற்றுவித்த ஆசிரியா்களையும் பள்ளியின் தாளாளா் கே.வி.ராதாகிருஷ்ணன், அனிதா இராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை குட்சமாரிட்டன் பள்ளி இயக்குநா் அலெக்சாண்டா், பள்ளி துணை முதல்வா் சரோஜா தாமோதரன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.