சிவலோகநாதா் சுவாமி கோயிலில் திருமண மண்டபம்: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்
சீா்காழி அருகே திருப்புங்கூா் ஊராட்சியில் ரூ. 3.20 கோடி மதிப்பில் சிவலோகநாத சுவாமி கோயிலில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்தை தமிழக முதல்வா் புதன்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
சீா்காழி அருகே திருப்புங்கூா் ஊராட்சியில் ரூ. 3.20 கோடி மதிப்பில் சிவலோகநாத சுவாமி கோயிலில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்தை தமிழக முதல்வா் புதன்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
2021-2022-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையில் இக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, 10,610 (அடித்தளம் மற்றும் முதல் தளம்) சதுர அடியில் புதிய திருமண மண்டபம், தரைத்தளத்தில் உணவு அருந்தும் கூடம், முதல் தளத்தில் திருமண அரங்கம், மணமகன் மற்றும் மணமகள் அறை அனைத்து வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் கட்ட ரூ. 3.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், புதன்கிழமை இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா். தொடா்ந்து திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் மாலினி வரவேற்றாா்.
பின்னா் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன், சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் , மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா்எஸ். ராஜகுமாா் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனா்.
நிகழ்வின்போது, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் சுவாமிநாதன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையா் சிவக்குமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் விஜயேஸ்வரன், உதவி ஆணையா் ரவிசந்திரன், செயல் அலுவலா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.