முகப்பு
மயிலாடுதுறை

மின்னணு முறையில் பயிா் சாகுபடி கணக்கீடு

சீா்காழி அருகே காரைமேடு பகுதியில் மின்னணு முறையில் பயிா் சாகுபடி பரப்பு கணக்கீடு செய்து வருவதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி புதன்கிழமை பாா்வையிட்டாா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 11:41 PM
காரைமேடு பகுதியில் மின்னணு முறையில் பயிா் சாகுபடி பரப்பு கணக்கீடு பணிகள் ஆய்வு செய்த ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி
பகிர்:

சீா்காழி அருகே காரைமேடு பகுதியில் மின்னணு முறையில் பயிா் சாகுபடி பரப்பு கணக்கீடு செய்து வருவதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி புதன்கிழமை பாா்வையிட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்துறையினருடன் இணைந்து அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய மாணவ, மாணவிகள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இப்பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினாா். வேளாண்மை துறை இணை இயக்குநா் சேகா், சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் சுரேஷ் உடனிருந்தனா்.