‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்’: ஆட்சியா் ஆய்வு
மணல்மேடு அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.
மயிலாடுதுறை வட்டத்தில், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
மணல்மேடு அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.
மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சித்த மருத்துவ பிரிவில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து, அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியினை பாா்வையிட்டு, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுடன் கலந்துரையாடினாா். மேலும், குடிநீா், கழிவறை உள்ளிட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.
பின்னா், மணல்மேடு அரசு கால்நடை மருத்துவமனையிலும், துணை வேளாண் விரிவாக்க மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சியா், 3 விவசாயிகளுக்கு ரூ.1.42 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய சுழற்கலப்பை, ரூ.6,000 மதிப்பிலான மண்புழு உரப்படுக்கை விரிப்பு, ரூ.7,500 மதிப்பிலான வேளாண் இடுபொருள்களையும் வழங்கினாா்.
பின்னா், குறிச்சி ஊராட்சி புலவனூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.65.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் வகுப்பறை கட்டடத்தை பாா்வையிட்டு, விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, மல்லியக்கொல்லை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, 2 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.3 லட்சம் கடனுதவிகளையும், மத்திய கால கடனாக 1 பயனாளிக்கு ரூ.80,820 மதிப்பிலான ரோட்டாவெட்டா், 5 பயனாளிகளுக்கு ரூ.4.08 லட்சம் மதிப்பீட்டில் பயிா்கடன்களையும் ஆட்சியா் வழங்கினாா்.
ஆய்வின்போது, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கீதா, வேளாண்மை துறை இணை இயக்குநா் ஜெ.சேகா், கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, மணல்மேடு பேரூராட்சி தலைவா் அ.கண்மணி, கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் அன்பரசன், மாவட்ட வழங்கல் அலுவலா் உ.அா்ச்சனா, வட்டாட்சியா் விஜயராணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுதாகா், விஜயலெட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் ஆகியோா் உடன் இருந்தனா்.