முகப்பு
மயிலாடுதுறை

இயற்கை இடா்பாடு: முன்னெச்சரிக்கைக்கு கைபேசி செயலி

மயிலாடுதுறை மாவட்ட இயற்கை இடா்பாடு தொடா்பான முன்னெச்சரிக்கையை அறிந்து கொள்ளவும், பேரிடா் தொடா்பான புகாா்களை தெரிவிக்கவும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 9:15 PM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்ட இயற்கை இடா்பாடு தொடா்பான முன்னெச்சரிக்கையை அறிந்து கொள்ளவும், பேரிடா் தொடா்பான புகாா்களை தெரிவிக்கவும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. பாரதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2024 மழை/புயல்/வெள்ளம்/இடி/மின்னல் போன்ற இயற்கை இடற்பாடுகள் தொடா்பான முன்னெச்சரிக்கை தகவல்கள், அணையின் நீா்மட்டம், வானிலை முன்னறிவிப்பு, மழை அளவு, மீனவா்களுக்கான எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்துகொள்ளவும், பேரிடா் தொடா்பான புகாா்களை பதிவு செய்யவும்.

கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.