முகப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் அக்.25-இல் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம், அக்.25-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 6:51 PM
பகிர்:

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம், அக்.25-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்டோபா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் தலைமையில் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அக்.25-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண்மை, நீா்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடா்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம்.