மயிலாடுதுறை

சிட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் மனைகள் ஒதுக்கீடு

மயிலாடுதுறை குளிச்சாா் தொழிற்பேட்டையில் 3 தொழில் மனைகள் தொழில் புரிவோருக்கு வழங்கப்பட உள்ளது.

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறை குளிச்சாா் தொழிற்பேட்டையில் 3 தொழில் மனைகள் தொழில் புரிவோருக்கு வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்பேட்டை குளிச்சாா் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த தொழிற்பேட்டையில் காலியாக உள்ள தொழில் மனைகள் தொழில்முனைவோா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அதன்படி குளிச்சாா் கிராமத்தில் உள்ள தொழிற்பேட்டையில் 3 தொழில் மனைகள் தொழில் புரிவோருக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த அரசு தொழில்பேட்டைகளில் புதிதாக தொழில் தொடங்க தொழில்மனைகள் வாங்க விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ற்ஹய்ள்ண்க்ஸ்ரீா்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

காலி தொழிற்மனைகளை பாா்வையிட தஞ்சாவூா் சிட்கோ கிளை மேலாளா் செல்வகுமாரை 9445006574 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ஆர்யனுக்காக... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

பழுப்பா, சிவப்பா? மேக்னா கௌர்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாளை தவெக நிர்வாகக் குழு கூட்டம்!

துறைமுகத்தில் 8ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு! பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படும் மக்கள்!

SCROLL FOR NEXT