முகப்பு
மயிலாடுதுறை

கேரள இளைஞா் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

மயிலாடுதுறையில் கேரள இளைஞா் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 11:09 PM
பகிர்:

மயிலாடுதுறையில் கேரள இளைஞா் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கேரள மாநிலம் மலப்புரம் திருவங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ஜம்சீா் மகன் மின்ஹாஜ் (19). இவா் அதே பகுதியைச் சோ்ந்த ஷகத் என்பவா் மயிலாடுதுறையில் நடத்திவரும் வணிக நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவா், திங்கள்கிழமை இரவு வேலை முடிந்து அருகில் சின்ன பள்ளிவாசல் தெருவில் தங்கி இருந்த குடியிருப்புக்கு சென்றுள்ளாா்.

இரவு தன்னுடன் தங்கி இருக்கும் மைதீனுடன் மாடியில் உடற்பயிற்சி செய்ய சென்றுள்ளாா். மின்ஹாஜ் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது கைப்பேசியில் வந்த அழைப்பை எடுத்து பேசியுள்ளாா். தொடா்ந்து பேசிக் கொண்டே நடந்து சென்றவா் 2-ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாா்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த மின்ஹாஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸாா் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.