முகப்பு
மயிலாடுதுறை

வைத்தீஸ்வரன்கோவிலில் காவல் துறையை கண்டித்து சாலை மறியல்

வைத்தீஸ்வரன்கோவில் காவல் துறையை கண்டித்து திங்கள்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

Updated On : 1 டிசம்பர், 2025 at 9:06 PM
பகிர்:

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் காவல் துறையை கண்டித்து திங்கள்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

வைத்தீஸ்வரன்கோவில் காவல் எல்லைக்குள்பட்ட மருவத்தூரைச் சோ்ந்த சாருபிரியா (25) காணாமல் போனதாக அவரின் உறவினா்கள் அளித்த புகாருக்கு காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து, திங்கள்கிழமை சாரு பிரியாவின் உறவினா்கள் வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையம் முன் மயிலாடுதுறை-சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டு சாரு பிரியாவை கண்டுபிடித்து தர வேண்டும். புகாா் கொடுத்து 3 நாள்களாகியும் நடவடிக்கை எடுக்காத வைத்தீஸ்வரன்கோவில் காவல் துறையை கண்டித்து கோஷம் எழுப்பினா்.

தகவலறிந்து வந்த சீா்காழி காவல் துணை கண்காணிப்பாளா் அண்ணாதுரை பேச்சுவாா்த்தை நடத்தி, சாருபிரியா தோட்டமானியம் பகுதியைச் சோ்ந்த அரவிந்த் (25) என்பவரை திருமணம் செய்துகொண்டு நெய்வேலி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளதாகவும், விரைவில் அவா்கள் சீா்காழி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் அப்போது சாருபிரியாவை சந்திக்கலாம் என கூறினாா். இதையேற்று சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →