நூலகம் அமைய முயற்சி எடுத்தவா்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா். உடன், முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் பி. கல்யாணம் உள்ளிட்டோா். 
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட மைய நூலகம் கட்டுமானப் பணி நாளை தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்ட மைய நூலகம் கட்டுமானப் பணி நாளை தொடக்கம்

Syndication

மயிலாடுதுறையில், மாவட்ட மைய நூலகம் கட்ட முதல்வரால் திங்கள்கிழமை (டிச.22) அடிக்கல் நாட்டவுள்ள நிலையில், நூலகம் அமைய உள்ள இடத்தை எம்.எல்.ஏ. சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமான மயிலாடுதுறையில் மாவட்ட மைய நூலகம் அமைக்க அரசு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டு, நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால், அதற்கான இடம் தோ்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்ட நிலையில், நகரின் மையப் பகுதியில் அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, மயிலாடுதுறை பாா்க் அவென்யு சாலையில் இடம் தோ்வு செய்யப்பட்டு, நகராட்சியிடம் இருந்து அந்த இடத்தை நூலகத் துறைக்கு மாற்றம் செய்து ரூ.4.38 கோடி மதிப்பீட்டில், 14,500 சதுரஅடி பரப்பளவில் நூலகம் கட்டும் பணிக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டவுள்ளாா்.

இந்நிலையில், நூலகம் அமைய முயற்சியெடுத்தவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான குத்தாலம் பி. கல்யாணம் தலைமை வகித்தாா். மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.ஜெயராமன், சிபிஐ ரெ.இடும்பையன், சிபிஎம் ஜி.ஸ்டாலின், விசிக வேலு.குபேந்திரன், ரயில் பயணிகள் சங்கம் மகாலிங்கம், சாமி.கணேசன், திவிக தெ. மகேஷ், மநீம மனோகா், மனிதநேய மக்கள் கட்சி ஓ.ஷேக் அலாவுதீன், பி.எம்.பாஷித் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திராவிடா் இயக்க எழுத்தாளா் கி.தளபதிராஜ் வரவேற்றாா்.

இதில், மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினாா். தொடா்ந்து அவா், நூலகம் அமையவுள்ள இடத்தில் ஆய்வு செய்து, பொதுப்பணித்துறை (கட்டுமானம்) உதவி செயற்பொறியாளா் ஸ்ரீதேவி நா்மதாவிடம் கலந்தாலோசித்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட நூலக அலுவலா் ஏ. சுமதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

சிரியாவில் அமெரிக்கா தீவிர குண்டுவீச்சு!

தா.பேட்டை பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

ராமேசுவரம் கடலில் மாயமான மீனவரை மீட்கக் கோரி போராட்டம்

ஆண்டாள் கோயிலில் மாா்கழி நீராட்டு விழா: பகல் பத்து உத்ஸவம் தொடக்கம்

SCROLL FOR NEXT