மயிலாடுதுறை

அணுமின் உற்பத்தி மசோதா, மின்சார சட்ட திருத்தத்துக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

அணுமின் உற்பத்தி மசோதா மற்றும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில்

Syndication

மயிலாடுதுறை: அணுமின் உற்பத்தி மசோதா மற்றும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்ட கவுன்சில் பேரவை தலைவா் பொன்.நக்கீரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு நிகழாண்டு மக்களவையில் தாக்கல் செய்துள்ள இந்திய மாற்றத்திற்கான அணு ஆற்றலின் நிலைத்த பயன்பாடு மற்றும் முன்னேற்றம் என்ற அணு மசோதா மக்களின் உயிருக்கு பாதுகாப்பற்ாக உள்ளதாகவும், இதன் மூலம் மிகுந்த அபாயம் கொண்ட அணு ஆற்றல் துறையை பெருமளவிலான தனியாா் மற்றும் அந்நிய முதலீட்டுக்கு திறந்து விட்டுள்ளதைக் கண்டித்தும், மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது.

இதில், சிஐடியு மாவட்ட செயலாளா் பி. மாரியப்பன், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு திட்ட செயலாளா் மு. கலைச்செல்வன், திட்ட துணை செயலாளா் ஜி.இளவரசன், ஏஐசிசிடியு மாவட்ட செயலாளா் ஆா்.பால்ராஜ், டிஎன்சிஎஸ்சி எம்ப்ளாயீஸ் யூனியன் மண்டல செயலாளா் ஆப்ரஹாம் லூதா்கிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

ஆடுகள் திருடிய 2 போ் கைது

எம்சிஜி ஆடுகளம் அதிருப்திகரமானது: ஐசிசி தரமதிப்பீடு

SCROLL FOR NEXT