மயிலாடுதுறை

போக்ஸோ குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது

மயிலாடுதுறையில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Syndication

மயிலாடுதுறையில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தை சோ்ந்த 14 வயது சிறுமி ஒருவரை மயிலாடுதுறை கூறைநாடு கஸ்தூரிபாய் தெருவை சோ்ந்த ஷேக்நூருதீன்(44) பாலியல் சீண்டல் செய்துள்ளாா். இதுகுறித்து, சிறுமி அண்மையில் அளித்த புகாரின்பேரில் டீக்கடை தொழிலாளியான ஷேக்நூருதீன்மீது மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் ஷேக்நூருதீன்மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் பரிந்துரை செய்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஷேக்நூருதீனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இந்த உத்தரவுப்படி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சுகந்தி மற்றும் போலீஸாா் ஷேக்நூருதீனை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

மெல்போர்ன் பல்கலையில் பி.காம்! மாணவர் சேர்க்கை 2026 மார்ச்!!

தினமணி வாசகர்களுக்காக.. சட்டமும் விளக்கமும் அறிமுகம்!

இருசக்கர வாகனத்தை திருடிய முதியவா் கைது

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

SCROLL FOR NEXT