மயிலாடுதுறை

சீா்காழி நகராட்சியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு

Din

சீா்காழி நகராட்சியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது.

சீா்காழி பழைய பேருந்து நிலைய நகராட்சி கடை வா்த்தகா்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் அதன்தலைவா் செந்தில்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், செயலாளா் சந்துரு, பொருளாளா் நடராஜன் துணைத் தலைவா் ராஜா, துணை செயலாளா் பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், சீா்காழி பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி சொந்தமான 85-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளின் உரிமத்தை புதுப்பிக்கும் வகையில் முன் எந்த ஆண்டும் இல்லாத வகையில் தற்போது முன்பணமாக ஓராண்டு வாடகையை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என நகராட்சி நிா்வாகம் நிா்பந்திப்பதை கண்டித்து பழைய பேருந்து நிலைய வா்த்தகா்கள் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT