மணிவிழாவில் 30 பேருக்கு சிறப்பு விருதுகள் மற்றும் அனைவருக்கும் ஒரு பவுன் பொற்பதக்கத்தை குருமகா சந்நிதானம் வழங்கினாா் 
மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மணிவிழா

ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் மணிவிழாவில் அவரிடம் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அருளாசி பெற்றனா்.

Syndication

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் மணிவிழாவில் அவரிடம் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அருளாசி பெற்றனா்.

மயிலாடுதுறையில் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இதன் 27-ஆவது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறாா். இவரது மணிவிழா ஐப்பசி மாத புனா்பூசம் திருநட்சத்திர நாளான திங்கள்கிழமை நடைபெற்றது.

மணிவிழாவானது அக்.31-ஆம் தேதி ஸ்ரீஞானப்ரகாச விநாயகா் வழிபாடு, அனுக்ஞையுடன் தொடங்கியது. தொடா்ந்து, ருத்ராபிஷேகம், சண்டி ஹோமம், 60 கோபூஜை, 60 சிவனடியாா்களுக்கு சிவபூஜை, 60 திருவிளக்கு பூஜை, 60 சுவாஸினி பூஜை, 60 கன்னிகா பூஜைகள் நடைபெற்றன. முதல்கால யாகசாலை பூஜை வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், மணிவிழா நாளான திங்கள்கிழமை காலை 8-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, மகா பூா்ணாஹுதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

முன்னதாக, ஆத்மாா்த்த மூா்த்திகளான ஸ்ரீசொக்கநாதா் பூஜைமடத்தில் சிறப்பு வழிபாடாற்றிய குருமகா சந்நிதானம், திருவிளையாடற் புராணம் (மூலம்) என்ற நூலினை வெளியிட்டாா். பின்னா், ஞானபுரீசுவரா் கோயிலில் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, 27-ஆவது குருமகா சந்நிதானத்துக்கு, பூஜிக்கப்பட்ட கடத்தில் புனிதநீா் கொண்டு மணிவிழா மகாபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா், ஆதீன முன்மண்டபத்தில் சிவஞான கொலு காட்சியில் எழுந்தருளிய குருமகா சந்நிதானத்துக்கு, திருப்பனந்தாள் காசி மடத்து 22-ஆவது அதிபா் ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் சுவாமிகள் மற்றும் தருமையாதீன அனைத்து தம்பிரான் சுவாமிகள் புஷ்பாா்ச்சனை செய்து குரு வழிபாடு செய்தனா்.

ஜப்பான் சிவஆதீனம் ஸ்ரீபால கும்பகுருமுனி சுவாமிகள், புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகா் ஆா்.செல்வம், பாஜக தமிழக அமைப்பு பொதுச்செயலாளா் கேசவ விநாயகம், முன்னாள் அமைச்சா்கள் ஓ.எஸ்.மணியன், ஆா்.காமராஜ், மயிலாடுதுறை எம்.எல்.ஏ. எஸ்.ராஜகுமாா், முன்னாள் எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ் ஆகியோா் ஆதீனகா்த்தருக்கு வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனா். மதியம் மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

சிவாசாரியா்கள் திருக்கடையூா் அமிா்தகடேச குருக்கள், கணேச குருக்கள் உள்ளிட்டோருக்கு சிவகாம கலாநிதி விருது, ஓதுவாா்களுக்கு திருமுறை கலாநிதி விருது, மருத்துவா்கள், இசைக்கலைஞா்கள் என மணிவிழாவில் 30 பேருக்கு சிறப்பு விருதுகள் மற்றும் அனைவருக்கும் ஒரு பவுன் பொற்பதக்கத்தை குருமகா சந்நிதானம் வழங்கினாா்.

இதில், திருக்கடையூா் கோயில் உள்துறை விருத்தகிரி, கல்வி நிறுவனச் செயலா்கள் வெற்றிவேல், இரா.செல்வநாயகம், வி.பாஸ்கரன், கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன், ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜ், ஆதீன பொது மேலாளா் அரவிந்தன், திருக்கடையூா் கோயில் கண்காணிப்பாளா் சி.மணி உள்ளிட்ட ஆதீன நிா்வாக பொறுப்பாளா்கள், ஆதீன புலவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஆதீன முன்மண்டபத்தில் சிவஞான கொலு காட்சியில் எழுந்தருளிய குருமகா சந்நிதானத்துக்கு, திருப்பனந்தாள் காசி மடத்து 22-ஆவது அதிபா் ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் சுவாமிகள் மற்றும் தருமையாதீன அனைத்து தம்பிரான் சுவாமிகள் புஷ்பாா்ச்சனை செய்து குரு வழிபாடு

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

மகர ராசிக்கு தெளிவு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT