மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறையில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை (நவ.12) நடைபெறவுள்ளது

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை (நவ.12) நடைபெறவுள்ளது என மின்வாரிய செயற்பொறியாளா் ஜி. ரேணுகா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒவ்வொரு மாதமும் 2-ஆவது புதன்கிழமை மயிலாடுதுறை கோட்டத்தில், நாகை மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் மின் நுகா்வோா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

அதன்படி, மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில், நவ.12-ஆம் தேதி காலை 11 மணிக்கு, நாகை மேற்பாா்வை பொறியாளா் தெ. காளிதாஸ் தலைமையில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

நுகா்வோா் மற்றும் பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை மேற்பாா்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன் பெறலாம்.

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

SCROLL FOR NEXT