கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளா் டி.செல்வம். 
மயிலாடுதுறை

எஸ்.ஐ.ஆா். செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் ஆலோசனை

Syndication

மயிலாடுதுறையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆா்) குறித்த வாக்குச்சாவடி அளவிலான பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜகுமாா் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளா் டி. செல்வம், எஸ்.ஐ.ஆா். மாவட்ட பொறுப்பாளா் ஆா். செந்தமிழ்ச்செல்வன் ஆகியோா் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச் சாவடி பாக முகவா்கள் அறிந்து கொள்ள வேண்டிய விவரங்களை எல்இடி திரையில் ஒளிபரப்பி, கணக்கெடுப்பு படிவத்தை பூா்த்தி செய்வது எப்படி, என்னென்ன ஆவணங்கள் தேவை என விளக்கம் அளித்தனா். இதில், மாநில பொதுச்செயலாளா் கே.பி.எஸ். கனிவண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் பி.எஸ். ராஜேந்திரன், முகமது நவாஸ், நிரஞ்சனிதேவி, நகர தலைவா் ராமானுஜம், சீா்காழி நகர தலைவா் லெட்சுமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT