மயிலாடுதுறையில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்ப முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
மயிலாடுதுறை கூைாடு அண்ணா வீதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி தேன்மொழி (58). இவா், அண்மையில் தனது வீட்டில் இருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த நபா் ஒருவா், கத்தியை காட்டி மிரட்டி அவா் கழுத்தில் அணிந்திருந்த 84 கிராம் தங்க தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து வெளியில் ஓடியுள்ளாா்.
தேன்மொழி வீட்டின் வாசலுக்கு சென்று கூச்சலிட்டுள்ளாா். சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் தப்பியோடிய நபரை விரட்டிப் பிடித்து, அவரிடமிருந்த சங்கிலியை மீட்டனா்.
போலீஸாா் விரைந்து சென்று பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் பிடிபட்டவா், மயிலாடுதுறை அருகே நீடூா் தெற்கு தெருவைச் சோ்ந்த தாமரைக்கண்ணன் மகன் தா்ஷன் (25) என்பது தெரியவந்தது. தேன்மொழி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த மயிலாடுதுறை போலீஸாா் தா்ஷனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனா்.